Last Updated:
சீனாவில் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் தோன்றிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் தோன்றிய காட்சி காண்போரை வியப்படைய செய்துள்ளது.
சீனாவின் ஜின்பிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹாங்ஹே பள்ளத்தாக்கு உலகின் பட்டாம்பூச்சி இனங்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்த பட்டாம்பூச்சிப் பள்ளத்தாக்கில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் முற்பகுதியில் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் கூடுகளில் இருந்து வெளிப்படும் கண்கொள்ளா அதிசயம் நிகழ்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒரே நேரத்தில் தோன்றிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
#WATCH | சீனாவின் யுனான் மாகாண வனத்தை அலங்கரிக்கும் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள். காண குவியும் சுற்றுலாப் பயணிகள்#china #butterfly #News18TamilNadu pic.twitter.com/eVDzUreQu5
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 18, 2026
ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாத காலப்பகுதியில், ஜின்பிங்கில் உள்ள காடுகளில் லட்சக்கணக்கான கூட்டுப்புழுக்கள் ஒரே நேரத்தில் பட்டாம்பூச்சிகளாக உருமாறி வெளிவருகின்றன. இதனாலேயே ஒரே நேரத்தில் இத்தனை பட்டாம்பூச்சிகள் தோன்றுகின்றன. இக்காரணத்தினாலேயே யுனான் மாகாணம் பட்டாம்பூச்சிகளின் சொர்க்கமாக கருதப்படுகிறது. இங்கு சுமார் 1,300 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வாழ்கின்றன. இதில் சீனா மற்றும் யுனான் பகுதிக்கு மட்டுமே உரித்தான (Endemic) அரிய வகை இனங்களும் அடங்கும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை விரும்பிகளுக்க மிகச்சிறந்த இடமாக இந்த ஹாங்ஹே இருக்கிறது என்றாலும் மிகையில்லை!
May 19, 2026 10:22 AM IST


