• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Canara Bank | கனரா வங்கியின் FD திட்டங்கள்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Canara Bank | கனரா வங்கியின் FD திட்டங்கள்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 25, 2025 7:44 AM IST

Canara Bank | கனரா வங்கியானது டேக்ஸ் சேவிங்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.70 சதவீத வட்டியை வழங்குகிறது.

News18
News18

பொதுவாக, பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறிப்பிடத்தக்க அளவு ரிஸ்க்கானது மற்றும் மியூட்சுவல் ஃபண்ட்ஸ்களும் கிட்டத்தட்ட ரிஸ்க் கொண்டது. எனவே, ஷேர் மார்க்கெட் மற்றும் மியூட்சுவல் ஃபண்ட்ஸ்களில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்ய பலரும் தயங்குகிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை தேடும் மில்லியன் கணக்கான மக்களில் பலர் இறுதியாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் தற்போது, பொதுத்துறை வங்கியான கனரா பேங்க் ரூ.2 கோடிக்குக் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி விகிதத்தை வழங்குவதை தெரிந்து கொள்ளுங்கள்.

கனரா வங்கியானது 7 முதல் 45 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வோருக்கு 4.00% வட்டியை வழங்குகிறது. அதே நேரம் 46 முதல் 90 நாட்கள் வரையிலான FD திட்டங்களுக்கு 5.25% வட்டி வழங்குகிறது. 91 முதல் 179 நாட்கள் வரையிலான  FD திட்டங்களுக்கு 5.50% வட்டியும், 180 முதல் 269 நாட்கள் வரையிலான  FD திட்டங்களில் முதலீடு செய்வோருக்கு 6.15% வட்டியும், 270 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான FD திட்டங்களுக்கு 6.25% வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

1 வருடத்திற்கும் அதிகமான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களை பொறுத்த வரை இந்த வங்கியானது 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான  ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.85% வட்டியை வழங்குகிறது. 3 முதல் 4 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.80% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.70% வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கும் 6.70% வட்டியை வங்கி தற்போது அளித்து வருகிறது.

இது தவிர, கனரா வங்கியானது டேக்ஸ் சேவிங்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.70 சதவீத வட்டியை வழங்குகிறது. மேற்கண்ட மெச்சூரிட்டி பீரியட்ஸ் கொண்ட FD திட்டங்களுக்கு வழங்குவதை விட, 444 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக இந்த வங்கி 7.25 சதவீத வட்டி வழங்குகிறது. அதே சமயம் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 50 பேஸிஸ் பாயின்ட்ஸ் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

கனரா வங்கி FD திட்டத்தில் முதலீடு செய்து ரூ1.39 லட்சம் பெறுவது எப்படி?

கனரா வங்கியின் 5 வருட மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD திட்டத்தில் ஒருவர்  ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அவருக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். FD கால்குலேட்டரின் படி, 6.70 சதவீத விகிதத்தில், அவருக்கு ரூ.39,407 வட்டி கிடைக்கும். இதன் விளைவாக 5 ஆண்டுகளுக்கு பின் வட்டி மற்றும் அசல் உட்பட அவருக்கு கிடைக்கும் மொத்த வருமானம் ரூ.1,39,407-ஆக இருக்கும். அதிகபட்ச வட்டி (7.25 %)வழங்கப்படும் 444 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட இந்த வங்கியின் FD திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்தால் அவருக்கு வட்டியாக ரூ.23,144 கிடைக்கும். எனவே அவர் பெறும் தொகை ரூ.1,23,144-ஆக இருக்கும். நீங்கள் ஒரு வருடம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு FD-யில் முதலீடு செய்தால், 6.85 சதவீத வட்டி விகிதத்தில் 40,439 கிடைக்கும். இதனால் நீங்கள் 1,40,439  வருமானத்தைப் பெறுவீர்கள்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 25, 2025 7:44 AM IST

Read More

Previous Post

கோர விபத்து – மருத்துவ பீட மாணவன் பரிதாபமாக பலி

Next Post

புத்தாதானில் சபா தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு; இருண்ட வானம் இருந்தும் சுமுகமாக தொடங்கியது | Makkal Osai

Next Post
புத்தாதானில் சபா தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு; இருண்ட வானம் இருந்தும் சுமுகமாக தொடங்கியது | Makkal Osai

புத்தாதானில் சபா தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு; இருண்ட வானம் இருந்தும் சுமுகமாக தொடங்கியது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin