மறைமுக கட்டணங்கள்: அனைத்து BNPL வழங்குனர்களும் குறுகிய கால பேமெண்ட்களுக்கு பூஜ்ஜிய வட்டி விகிதத்தை வழங்கினாலும், தாமதமாக செலுத்துவதற்கான கட்டணங்கள், ப்ராசசிங் கட்டணங்கள் மற்றும் அபராத வட்டி கட்டணங்கள் போன்றவற்றை வசூல் செய்கின்றனர். ஒரு தவணையை நீங்கள் செலுத்த தவறினாலும் அந்த தாமதத்திற்காக 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும், இன்னும் சில தளங்கள் கன்வீனியன்ஸ் கட்டணங்கள் அல்லது சேவைகளுக்கான GST போன்றவற்றை வசூல் செய்கின்றனர்.


