நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நடப்பாண்டின் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் நேற்று தொடங்கி 19 அமா்வுகளுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், தங்கம், வெள்ளி நகைகளுக்கு 6%, பிளாட்டினம் நகைகளுக்கு 6.4% ஆக சுங்க வரி குறைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் நகை விலை எவ்வளவு குறையும் என்பது குறித்து ஜெயந்திலால் சலானி தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
அதில், 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 6 சதவீதமாக குறைத்துள்ளார்கள். 4 சதவீதம் குறைந்துள்ளதால், ஏறக்குறைய ஒரு சவரனுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை குறையும். ஒரு கிராமுக்கு ரூ.100 முதல் ரூ.105 வரை குறையும். அதுவும் உடனடியாக அமலுக்கு வரும். இந்த வரி குறைப்பின் மூலம் கடத்தல் தங்கம் குறையும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தோம். தற்போது மத்திய அரசு அதை பரிசீலனை செய்துள்ளது.
தங்கம் போன்றே வெள்ளி, பிளாட்டினம் விலையும் கணிசமாக குறைந்துள்ளதால், தாங்கம் வாங்குவதற்கு காத்திருக்கும் நகை பிரியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.” என தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)