BTS குழுவில் இருந்து கட்டாய ராணுவ சேவையை நிறைவு செய்யும் மூன்று மற்றும் நான்காவது நபர்கள் இவர்கள். கடந்த ஆண்டு ஜே-ஹோப் மற்றும் ஜின் ராணுவ சேவையை நிறைவு செய்திருந்தனர்.
RM மற்றும் V ராணுவ சீருடையில் இருக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. இருவரும் 2023ம் ஆண்டு நவம்பரில் ராணுவ சேவையைத் தொடங்கினர். தனித்தனியான பிராந்தியங்களில் பணியாற்றில் ஒரே நாளில் முடித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து ஜிமின் மற்றும் ஜங்குக்கும் ராணுவ சேவையில் இணைந்தனர். இவர்களது சேவைக்காலம் ஜூன் 11ம் தேதி முடிவடைகிறது. இறுதியாக சுகா ஜூன்21ம் தேதி வீடுதிரும்புவார்.
மீண்டும் BTS குழு ஒன்றிணைவதால் உற்சாகமாக இருக்கிறார்கள் அதன் ரசிகர்கள்.!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

