கேள்வி:- ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் இருக்கும் என்று காவல்துறை யூகிக்கவில்லையா?
சென்னை மாநகரில் ஏ,பி.சி பிரிவுகளில் 4 ஆயிரம் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். அதில் 750 பேர் சிறையில் உள்ளனர். குண்டர் சட்டத்தில் 2021ஆம் ஆண்டில் 409 பேரும், 2022இல் 406 பேரும், 2023ஆம் ஆண்டில் 714 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர், இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களில் 769 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உள்ளோம்.

