Last Updated:
நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-ன் 5ஜி சேவைகள் திட்டமிடல் குறித்த நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இங்கே உள்ளன.
அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் விரைவில் கூடுதலாக 23,000 நான்காம் தலைமுறை அல்லது 4ஜி தளங்களை அமைக்க உள்ளது. மேலும், தனியார் துறை நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில், வருவாய் பகிர்வு மாதிரியைப் பயன்படுத்தி, தனது நெட்வொர்க்கை அடுத்த தலைமுறை (5ஜி) தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தவும் உள்ளது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல் உட்பட இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவைகளைத் தொடங்கி பல மாதங்களாகி விட்டன. ஆனால் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் இன்னும் தனது 4ஜி இன்டர்நெட் கனெக்டிவிட்டியை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-ஆனது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களைவிட வெகுவாகப் பின்தங்கிவிட்டது போலத் தெரிகிறது; ஒரு சிறிய தாமதம் பல ஆண்டுகள் இடைவெளியாக தற்போது மாறிவிட்டது.
5ஜி அறிமுகம் குறித்து தொடர்ந்து மௌனம் காத்துவரும் பிஎஸ்என்எல்:
5ஜி சேவைகளை தொடங்குவது குறித்து பிஎஸ்என்எல் தொடர்ந்து அமைதி காப்பதற்கு, நிறுவனம் 5G சார்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அர்த்தமல்ல. இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் 5G-ஐ அறிமுகப்படுத்தி அதற்கான தங்கள் கட்டணங்களை சீராக அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மெதுவான BSNL திட்டமிட்ட அணுகுமுறையைக் கையாள்வதாகத் தெரிகிறது.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-ன் 5ஜி சேவைகள் திட்டமிடல் குறித்த நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இங்கே உள்ளன. BSNL-ன் சமீபத்திய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, நிறுவனம் 5ஜி-க்கு அவசரப்படாமல், 4ஜி தொழில்நுட்பத்தின்மீது அதிக நம்பிக்கை வைப்பதுபோல் தெரிகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அந்த நிறுவனம் நாடு முழுவதும் 97,000-க்கும் மேற்பட்ட இடங்களில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதோடு, மேலும் விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் நம்பகமான 4ஜி கனெக்டிவிட்டி இல்லாததால், பிஎஸ்என்எல் 4ஜி-ஐ வாடிக்கையாளர்களின் உண்மையான தேவையாக கருதுகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் சேவைகளை அதிக விலைக்கு அளித்து வரும் நேரத்தில், நிறுவனத்தின் மலிவு விலையில் வழங்கப்படும் 4G திட்டங்கள் வாடிக்கையாளர்களை சேர்க்க உதவுகின்றன.
பல ஊடக அறிக்கைகளால் மேற்கோள்காட்டப்பட்ட தொழில்துறை தகவல்கள், பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறைந்த விலை மற்றும் நிலையான 4G சேவை அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம், செயல்பாட்டு செலவு மாதிரியை (operational expenditure model) பயன்படுத்தி, தனித்து இயங்கும் 5ஜி சேவையை தொடங்கத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் காட்டிவரும் முனைப்பு காரணமாகவே, பிஎஸ்என்எல் தனது 5ஜி திட்டங்களைத் தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது.


