BSNLஇன் புதிய ரீசார்ஜ் திட்டம் நீண்ட கால வேலிடிட்டியுடன் வருவது மட்டுமின்றி, குறைந்த விலையில் சிறந்த பலன்களையும் வழங்குகிறது. தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் ஒப்பிடுகையில், BSNLஇன் இந்தத் திட்டமானது இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற கட்டணத் திட்டமாகும்.
BSNLஇன் சூப்பர் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.1,999 ஆகும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 12 மாதங்கள். இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளது, அதாவது வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கிலும் கூடுதல் பணம் செலுத்தாமல் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 600ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் இல்லை. இது தவிர, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் இலவச அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS ஆகியவை இலவசமாக கிடைக்கிறது. இந்தத் திட்டமானது இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து BSNL சர்கில்களிலும் கிடைக்கிறது.
ரூ.1,999 பிஎஸ்என்எல் திட்டம்:
தினசரி டேட்டா லிமிட் இல்லாமல் 600 ஜிபி டேட்டா
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் BSNL ஆகியவற்றுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்
ஒரு நாளைக்கு 100 SMS
நேஷனல் ரோமிங், லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கான முழு அக்சஸையும் வழங்குகிறது.
குறைந்த செலவு மற்றும் வசதியானது:
இந்த ரூ.1,999 திட்டத்தின் தினசரி செலவு தோராயமாக ரூ.5 ஆகும். இதில் டேட்டா, அழைப்பு, நீண்ட கால வேலிடிட்டி மற்றும் SMS ஆகிய வசதிகளை நிறுவனம் வழங்கி வருகிறது. தினசரி டேட்டா லிமிட் இல்லாததால், யூசர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் டேட்டாவைப் பயன்படுத்த முடியும். இது ஸ்ட்ரீமிங், ப்ரௌசிங் மற்றும் வேலை தொடர்பான பணிகளுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டமானது குறிப்பாக அதிவேக டேட்டாவை விட, பணத்தை சேமிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து BSNL கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இந்த நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை மேம்படுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக BSNL மலிவு விலையில் கவனம் செலுத்துகிறது.
இதையும் படிக்க: 3 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் உங்கள் பணம்.. SBI மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை தெரிந்து கொள்ளுங்கள்
நிறுவனம் இன்னும் நாடு முழுவதும் 4Gஐ முழுமையாக செயல்படுத்தவில்லை என்பதால், அதன் போட்டியாளர்களைப் போல விலையுயர்ந்த கட்டணங்களை வசூலிக்க முடியாது. மாறாக, செலவு குறைந்த திட்டங்களை வழங்குவதன் மூலம் அதன் சந்தைப் பங்கை மீண்டும் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டமானது குறிப்பாக அதிவேக டேட்டாவை விட சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
February 23, 2025 7:14 AM IST

