Last Updated:
Breast Milk Ice Cream: அமெரிக்காவில் தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளினில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று தனித்துவமான தாய்ப்பால் ஐஸ்கிரீமை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
புரூக்ளின் பகுதியில் OddFellows Ice Cream Co. என்ற நிறுவனம் பிரத்யேக பதிப்பாக தாய்ப்பால் ஐஸ்கிரீம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது விற்பனைக்கு வந்ததில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த ஐஸ்கிரீமை வாங்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனையகம் இருக்கும் வீதி நெடுக கூட்டம் வரிசைக் கட்டி நிற்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் பெயர் தாய்ப்பால் என வைக்கப்பட்டாலும், உண்மையாகவே இது பெண்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படவில்லை என விவரித்துள்ளது. ஆனால், இதில் liposomal bovine colostrum என்ற உணவு சார்ந்த Supplement சேர்க்கப்பட்டுள்ளது, இது தாய்ப்பால் காணப்படும் ஒன்றாகும்.
இதை சேர்த்து தனித்துவமான சுவையில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக, சுவை ஓரளவுக்கு தெரிந்து வகையிலும் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சர்யமளிக்கக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு OddFellows Ice Cream Co நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. Frida என்ற தாய் நிறுவனத்துடன் கைக்கோர்த்து இந்த OddFellows Ice Cream Co தாய்ப்பால் ஐஸ்கிரீமை விற்பனை செய்து வருகிறது. மேலும் இதன் மீதான ஆர்வம் நீடிக்க வேண்டும் என்பதால் தினமும் வெறும் 50 ஸ்கூப் மட்டுமே விற்பனை செய்கிறது. இதனால், தினம் தினம் இந்த ஐஸ்கிரீமை ருசிபார்க்க கடையில் கூட்டம் கூடிவிடுகிறது.
August 10, 2025 2:40 PM IST


