Last Updated:
உலகின் தலைசிறந்த அணியான பிரேசிலுக்கு எதிராக ஜப்பான் பெற்றுள்ள வெற்றி அந்நாட்டு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நட்பு ரீதியில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் வலுவான பிரேசில் அணியை வீழ்த்தி ஜப்பான் அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பிரேசில் மற்றும் ஜப்பான் அணிகள் மோதிய நட்பு ரீதியிலான ஜப்பான் தலைநகர் டோக்யோவில் இன்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து பிரேசில் அணி ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது.
அந்த அணியின் பவுலோ ஹென்ரிக் மற்றும் கேப்ரியல் மார்ட்டினெல்லி ஆகியோர் கோல் அடித்து பிரேசிலை முன்னிலை பெற வைத்தனர். முதல் பாதிவரை இதே நிலைதான் நீடித்ததால் ஆட்டத்தில் பிரேசில் முன்னிலை பெற்றது.
2 ஆவதுபாதியின்போது ஜப்பான் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல்களை அடுத்தடுத்து அடித்தனர். அந்த அணியின் தகுமி மினமினோ முதல் கோல் அடித்து ஜப்பானுக்கு நம்பிக்கை அளித்தார்.
அவரை தொடர்ந்து கீட்டோ நகமுரா கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆட்டத்தின்71 ஆவது நிமிடத்தின்போது கிடைத்த கார்னர் வாய்ப்பை ஜப்பான் அணியின் அயாசே உயெடா அற்புதமாக தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் ஜப்பான் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
October 14, 2025 7:27 PM IST