Last Updated:
Tarique Rahman Vs Muhammad Yunus | ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. தாரிக் ரஹ்மான், முகமது யூனுஸ் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், வங்கதேச 2026-ன் திசையை தீர்மானிக்கப் போகின்றன.
அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டங்களின் பின்னணியில் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, சட்ட ஒழுங்கு மற்றும் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, 300 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அவாமி லீக் கட்சி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. அதனால் அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அடங்கிய 10 கட்சிகள் கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி (BNP) தலைவராக தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார். அவர் தலைமையிலான BNP கட்சி, அரசியல் மாற்றத்தைக் கோரி பிரச்சாரம் செய்தது. BNP-க்கு எதிராக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. பிஎன்பி vs BNP ஜமாத்-இ-இஸ்லாமி எனும் போட்டி இந்தத் தேர்தலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
அதேநேரம் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் (Muhammad Yunus), அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்தி வருகிறார்.
Feb 12, 2026 11:25 AM IST
BNP vs Jamaat | வங்கதேச தேர்தல் 2026 : இருமுனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? – கள நிலவரம் இதுதான்!


