Last Updated:
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ராக்கெட், செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதில் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஜெஃப் பெசோஸ் நிறுவனத்தின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட், வெற்றிகரமாக தரையிறங்கி இருந்தாலும், செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதில் பின்னடைவை சந்தித்துள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனம், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக விண்வெளி துறையில் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் விண்வெளியிலேயே செல்போன் கோபுரங்களை அமைக்கும் வகையில், AST என்ற நிறுவனத்தின் BlueBird 7 என்ற செயற்கைக்கோளை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘நியூ கிளென்’ ராக்கெட் மூலம் ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து விண்ணில் ஏவியது.
‘நியூ கிளென்’ ராக்கெட் திட்டமிட்டபடி, பாதுகாப்பாக 10 நிமிடங்களில் தரையிறங்கினாலும் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதில் பின்னடைவு சந்தித்துள்ளது. ராக்கெட்டின் மேல் அடுக்கு (Upper Stage) சரியாகச் செயல்படாததால், திட்டமிட்ட சுற்றுப்பாதையை விட மிகத் தாழ்வான பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. இது விண்வெளி அடிப்படையிலான இணையச் சேவையை வழங்கும் முயற்சியில் சிறிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

