• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election | 25 ஆண்டு வரலாற்றில் 60% தாண்டி பிகாரில் வாக்குப் பதிவு… திரளாக வாக்கு செலுத்திய மக்கள்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election | 25 ஆண்டு வரலாற்றில் 60% தாண்டி பிகாரில் வாக்குப் பதிவு… திரளாக வாக்கு செலுத்திய மக்கள்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 06, 2025 7:21 PM IST

பிகார் சட்டமன்ற தேர்தலில் 121 தொகுதிகளில் 60.25% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 25 ஆண்டு வரலாற்றில் இந்த ஆண்டு தேர்தலில்தான் 60% தாண்டி வாக்குகள் பதிவாகியுள்ளன.

News18
News18

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

பீகார் மாநிலத்தில், ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய என்.டி.ஏ. கூட்டணி, எதிர்க்கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் (இந்தியா) கூட்டணியும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி உட்பட மற்ற கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இதில், என்.டி.ஏ. மற்றும் மகாகத்பந்தன் ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவிவருகிறது. சில இடங்களில், வாக்கு எந்திரம் கோளாறு, மின்வெட்டு என புகார்கள் எழுந்தன. அதேபோல், பீகாரின் தற்போதைய துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா கான்வாய் மீது தொகுதி மக்கள் தாக்குதல் நடத்தியது என பரபரப்பாக நடைபெற்றுவந்த பீகார் மாநிலத்தின் முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளிலும் நிறைவடைந்தது.

மாலை 5 மணி நிலவரப்படி பீகார் மாநிலத்தில் 60.13% வாக்குகள் பதிவாகியிருந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதில், அதிகப்பட்சமாக பெகுசராய் 67.32%, கோபால்கஞ்ச் 64.96% மற்றும் முசாபர்பூர் 64.63% வாக்குகள் பதிவாகி முதல் மூன்று இடத்தில் இருந்தன. பீகார் துணை முதலமைச்சரான விஜய் குமார் சின்ஹா தொகுதியான லக்கிசராய் தொகுதியில் 62.76% வாக்குகள் பதிவாகியுள்ளது.

பீகார் துணை முதலமைச்சரும், லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா தனது வாக்கை செலுத்திவிட்டு மற்ற பூத்களில் வாக்குப்பதிவை பார்வையிட கோரியாரி கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு கூடியிருந்த ஊர்மக்கள் அவரது கான்வாய் மீது மாட்டு சாணம், செருப்பு, கற்களைக் கொண்டு தாக்கினர். தாக்கியவர்கள் ஆர்.ஜே.டி. கட்சியினர் என விஜய் குமார் சின்ஹா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பீகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் மொத்தம், 60.25% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் 60% வாக்குகள் தாண்டி 2025ஆம் ஆண்டு தேர்தலில் 60.25% வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 62.6% வாக்குகள் பதிவாகியிருந்தது. அதன்பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2025ஆம் ஆண்டு தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 60.25% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 06, 2025 7:17 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ‘தேசிய தொழுநோய் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

Next Post

சென்னை அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. தொடரிலிருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி… | விளையாட்டு

Next Post
சென்னை அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. தொடரிலிருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி… | விளையாட்டு

சென்னை அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. தொடரிலிருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி… | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin