Last Updated:
பிகார் தேர்தலில் 243 தொகுதிகள், 2 கட்ட வாக்குப்பதிவு, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகாகத்பந்தன் இடையே போட்டி, கருத்துக்கணிப்பில் NDA முன்னிலை.
முதற்கட்ட வாக்குப் பதிவில், பிகார் மாநிலத்தின் 73 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகார் சட்டமன்றத்தில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
பாஜக : 101
ஐ.ஜ.த : 101
எல்.ஜெ.பி. (ராம்விலாஸ்) : 29
ராஷ்டிரிய லோக் மோர்சா : 6
ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா : 6
ஆர்.ஜே.டி : 143
காங்கிரஸ் : 61
சிபிஐ : 9
சிபிஐ (எம்) : 4
சிபிஐ (எம்.எல்.) : 20
வி.ஐ.பி. : 15
ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் முக்கிய இடங்களை வகிக்கும். கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது. இருந்தாலும், மக்களுக்கு கருத்துக் கணிப்பு மீதான ஆவல் இருந்துக்கொண்டே இருக்கும்.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 122 இடங்கள் தேவை.
| நிறுவனங்கள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி | மகாகத்பந்தன் கூட்டணி | ஜன் சுராஜ் கட்சி | மற்றவை |
| டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு | 142 – 145 | 88 – 91 | 00 | 00 |
| பி-மார்க் கருத்துக்கணிப்பு | 142 – 162 | 80 – 98 | 1 – 4 | 0 – 3 |
| Peoples Pulse கருத்துக்கணிப்பு | 133 – 159 | 75 – 101 | 0 – 5 | 2 – 8 |
| MATRIZE கருத்துக்கணிப்பு : | 147 – 159 | 70 – 90 | 0 – 2 | 0 – 5 |
November 11, 2025 7:16 PM IST


