Last Updated:
பிகார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 122 தொகுதிகளில் நடைபெறுகிறது.
பிகார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 122 தொகுதிகளில் ஆயிரத்து 302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் மூன்று கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்காக 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக செயின்பூர், கோவிந்த்பூர், ராஜௌலி, ஜமுய், சிகந்திரா, சக்காய் மற்றும் ஜஜா ஆகிய ஏழு தொகுதிகளில் மாலை ஐந்து மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும். இதைத் தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
November 11, 2025 6:37 AM IST


