• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election: ரஜினியின் நாயகி முதல் சுஷாந்த் சிங்கின் சகோதரி வரை! களத்தில் இறங்கியுள்ள பாலிவுட் பட்டாளம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election: ரஜினியின் நாயகி முதல் சுஷாந்த் சிங்கின் சகோதரி வரை! களத்தில் இறங்கியுள்ள பாலிவுட் பட்டாளம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 27, 2025 9:14 PM IST

பிகார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது பாலிவுட் திரைத்துறை. அது எப்படி என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

News18
News18

பிகார் என்றாலே அங்குள்ள அரசியலோடு பின்னிப் பிணைந்த சாதி-மத மோதல்களும், மாஃபியா கேங்குகளும், நம்ப முடியாத ஊழல் கதைகளும்தான் உடனே நினைவுக்கு வரும். இந்தி பேசும் பிகாரின் இந்தப் பின்னணி போதாதா பாலிவுட் சினிமாக்காரர்களுக்கும், உள்ளூர் மொழியான போஜ்புரி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும்?

நம்மூர் அளவுக்கு இல்லாவிட்டாலும் பிகார் அரசியலில் திரைத்துறையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றே கூறலாம். பாலிவுட்டில் 80-களில் பெரும் புகழ்பெற்ற விளங்கிய சத்ருகன் சின்ஹா, பிகார் மண்ணைச் சேர்ந்தவர். ரஜினிகாந்த் உள்பட பல நாயகர்களுடன் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக விளங்கியவர்.

பின்னாளில் வாஜ்பாயின் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், பின்னர் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவரது மகள் சோனாக்ஷி சின்ஹாவும் ரஜினி உள்பட பலருடன் நாயகியாக வலம் வந்தவர்.

சத்ருகன் சின்ஹா தற்போது திரிணமுல் காங்கிரசுக்கு தாவி மேற்கு வங்கத்தில் எம்பியாக இருந்தாலும், பிகார் களத்தில் பாஜகவுக்கு எதிராக முக்கிய பங்காற்றுவார். திரைக்கலைஞர்களை பிரசாரக் களத்தில் இறக்குவது மட்டுமின்றி பாஜக ஒரு படி மேலே போய், இளம் பாடகி மைதிலி தாக்கூரை அலி நகர் தொகுதியின் வேட்பாளராக ஆக்கியுள்ளது. இது அந்தத் தொகுதியை விஐபி தொகுதியாக மாற்றியுள்ளது.

இதுபோல் போஜ்புரி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாக விளங்கும் பவன் சிங்கும் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். மறுபுறம் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் நடிகர் கேசரி லால் யாதவை களம் இறக்கி தேர்தல் களத்தை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக கால் பதித்துள்ள பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் விட்டேனா பார் எனும் வகையில் தன் பங்குக்கு நடிகர் ரிதேஷ் பாண்டேவை களம் இறக்கியுள்ளது. கல்வியே முக்கியம் என பரப்புரை மேற்கொள்ளும் ரிதேஷ் பாண்டேவின் பாணி இளம் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தோனி திரைப்படத்தில் நடித்து பின்னாளில் தற்கொலை செய்த சுஷாந்த் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரியான திவ்யா கவுதம் பாட்னாவில் உள்ள மாநிலத்தின் பெரிய தொகுதியான திகாவில் சிபிஐ- எம்எல் கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளார். நகர்ப்புறத் தொகுதி என்பதால் சுஷாந்தின் ரசிகர்களின் ஆதரவு நிச்சயமாக அவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்த திரையுலகப் பட்டாளம், பிகாரில் மத்திய மற்றும் விளிம்பு நிலை மக்களிடையே நல்ல வரவேற்பை தங்கள் கட்சிகளுக்குப் பெற்றுத் தரும் என கட்சிகள் நம்புகின்றன. வரும் நவம்பர் 14 ஆம் தேதி விடை தெரிந்துவிடும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 27, 2025 9:13 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Bihar Election: ரஜினியின் நாயகி முதல் சுஷாந்த் சிங்கின் சகோதரி வரை! களத்தில் இறங்கியுள்ள பாலிவுட் பட்டாளம்

Read More

Previous Post

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது நல்லது-துணை அமைச்சர்

Next Post

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்: அணித்தேர்வு குழப்பத்தில் ஆஸ்திரேலியா! | Steve Smith captain for first Ashes Test: Australia in team selection dilemma

Next Post
ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்: அணித்தேர்வு குழப்பத்தில் ஆஸ்திரேலியா! | Steve Smith captain for first Ashes Test: Australia in team selection dilemma

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்: அணித்தேர்வு குழப்பத்தில் ஆஸ்திரேலியா! | Steve Smith captain for first Ashes Test: Australia in team selection dilemma

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin