Last Updated:
முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 1250-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஓரணியிலும். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளை உள்ளடக்கிய மகாகட்பந்தன் கூட்டணி இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
இதை தவிர்த்து சில கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் இன்று 123 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
தொகுதி பங்கீடு செய்வதில் காங்கிரஸ் மற்றும் கட்சிகளுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் 122 தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வது இன்றுடன் நிறைவு பெறுகிறது.
October 20, 2025 3:28 PM IST


