Last Updated:
காங்கிரஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுடைய எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருக்கிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேலும் 6 வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுடைய எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.
243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகியவை இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
ஏற்கனவே தொகுதி பங்கீடு செய்வதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா கட்சிக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று பரவலாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக இன்று அக்கட்சி 6 வேட்பாளர்களை கூடுதலாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக காங்கிரஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுடைய எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருக்கிறது.
October 20, 2025 3:50 PM IST