• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election | “நிதிஷ்குமாரை நான் எப்படி முதலமைச்சராக தேர்வு செய்ய முடியும்” – அமித்ஷா ஓப்பன் டாக் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election | “நிதிஷ்குமாரை நான் எப்படி முதலமைச்சராக தேர்வு செய்ய முடியும்” – அமித்ஷா ஓப்பன் டாக் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 17, 2025 4:46 PM IST

இதுவரை இல்லாத வகையில், கூட்டணி தொகுதி பங்கீட்டில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சரிசமமாக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

News18
News18

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதில், முதல் கட்டமான வரும் 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. இதற்கிடையில், என்.டி.ஏ. கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வரவில்லை.

இதையும் படிங்க: “ஆணவப் படுகொலைக்கு எதிராக தனி சட்டம்…” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது; “நிதிஷ் குமார் தலைமையின் கீழ் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். அதேசமயம், என்.டி.ஏ. கூட்டணி பிரதமர் நரேந்திர மோடியே வழிநடத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

பிகாரின் நீண்ட கால முதலமைச்சரான நிதிஷ் குமார் இந்தத் தேர்தலில் வென்ற பின்னும் அவரே முதல்வராக தொடர்வாரா எனும் கேள்வி பொதுவாக எழுந்துள்ளது. காரணம், இதுவரை இல்லாத வகையில், கூட்டணி தொகுதி பங்கீட்டில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சரிசமமாக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தான வாதங்கள் அங்கு பெரிதும் எழுந்துவருகின்றன.

இந்தச் சூழலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தேசிய பாஜகவின் முன்னாள் தலைவர் அமித்ஷாவிடம், என்.டி.ஏ. கூட்டணி வென்று ஆட்சி அமைத்தால் மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராக்கப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “யார் முதலமைச்சர் என தேர்வு செய்வதற்கு நான் யார்? கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. எனவே தேர்தலுக்கு பிறகு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூடி பேசி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 17, 2025 4:42 PM IST

Read More

Previous Post

வெனிசுலாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவக் குவிப்பு: அதிகரிக்கும் பதற்றம்

Next Post

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார் எலெனா ரைபகினா | Elena Rybakina qualified for wta finals

Next Post
டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார் எலெனா ரைபகினா | Elena Rybakina qualified for wta finals

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார் எலெனா ரைபகினா | Elena Rybakina qualified for wta finals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin