• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election : சொந்தக் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் 30 நபர்கள்! பிகார் தேர்தல் களத்தில் பரபரப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election : சொந்தக் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் 30 நபர்கள்! பிகார் தேர்தல் களத்தில் பரபரப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 22, 2025 6:22 PM IST

பிகார் தேர்தலில் 30 பேர் சொந்தக் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

பிகார் சட்டமன்றத் தேர்தலில் 30 வேட்பாளர்கள் தங்கள் சொந்த கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இரண்டு கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஐக்கிய ஜனதாதளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, 143 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை செவ்வாயன்று ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டது. அதேபோல், கூட்டணி கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

தற்போது வரும் 6ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி மொத்தம் 1,314 வேட்பாளர்கள் 121 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில், இரண்டு கூட்டணியிலும் இருக்கும் அதிருப்தியாளர்களும் சுயேச்சையாக தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இரண்டு கூட்டணியையும் சேர்த்து சுமார் 30 நபர்கள் சுயேச்சையாக தங்கள் கட்சியை எதிர்த்தே வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியில் இணைந்துள்ளனர். கட்சி சார்பில் வேட்பாளர்கள் ஏற்கனவே களத்தில் இருந்துவர அதிருப்தியாளர்களும் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பிகார் தேர்தலில் பரபரப்பை கூட்டியுள்ளது.  

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 22, 2025 6:22 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Bihar Election : சொந்தக் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் 30 நபர்கள்! பிகார் தேர்தல் களத்தில் பரபரப்பு

Read More

Previous Post

பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக பெண் செய்த காரியம்… வீதியில் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு

Next Post

தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன் | rishabh pant to lead india a team versus south africa a team

Next Post
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன் | rishabh pant to lead india a team versus south africa a team

தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன் | rishabh pant to lead india a team versus south africa a team

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin