Last Updated:
இவர் தனது IPL கெரியரில் டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 3 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 37 ஆவது தலைவராக மிதுன் மன்ஹாஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலகின் முன்னணி விளையாட்டு நிர்வாகங்களில் ஒன்றாக பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ரோஜர் பின்னி செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு வயது 70 யை கடந்ததால் அவர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.
அவருக்கு பதிலாக புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டிருக்கிறார்.
மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது. ரோஜர் பின்னிக்குப் பிறகு இடைக்காலத் தலைவராகப் பணியாற்றிய ராஜீவ் சுக்லா, தொடர்ந்து துணைத் தலைவராகப் பதவி வகிப்பார்.
மிதுன் மன்ஹாஸ் முதல் தரப் போட்டிகளில் 27 சதங்கள் உட்பட 9,714 ரன்களையும், லிஸ்ட் ஏ (List A) போட்டிகளில் 4,126 ரன்களையும் எடுத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இவருக்கு ஒருபோதும் இந்திய தேசிய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
September 28, 2025 3:16 PM IST


