• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Barak System : ஈரானின் அதிநவீன ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் இஸ்ரேல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Barak System : ஈரானின் அதிநவீன ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் இஸ்ரேல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 21, 2025 8:45 PM IST

போர்க்கப்பலில் இருந்து வெளியிடப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சக்தி இந்த பராக் தடுப்பு அமைப்புக்கு உள்ளது.

வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிவீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சி
வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சி

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரான் நாட்டின் அதிநவீன ட்ரோன் விமானங்களை இஸ்ரேலின் பராக் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆளில்லா தாக்குதல் விமானத்தை குறி வைத்து ஏவப்பட்ட தடுப்பு அமைப்புகள் அந்த ட்ரோனை வெடித்துச் சிதறச் செய்கின்றன. இதில் தீப்பிழம்பு வெளிப்பட்டு அந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்படுகிறது.

ஈரான் நாடு அணுசக்தி திட்டங்களை மேற்கொண்டு வருவது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இஸ்ரேல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் விதமாக கடந்த சில நாட்களாக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் நாட்டில் செயல்படும் அணுசக்தி மையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன.

இரு தரப்பிலும் பொருள் மற்றும் உயிர் சேதங்கள் ஏராளம் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழலில், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன.

இந்த நிலையில், ஈரானின் ட்ரோன் விமானத்தை இஸ்ரேலின் பராக் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த பராக் வான் பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் நாடு உள்ளூரிலேயே தயார் செய்திருக்கிறது.

வான்வழி மூலம் வரும் எந்த ஒரு அச்சுறுத்தலையும் இந்த பராக் தடுப்பு அமைப்பு இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று அந்நாட்டின் ராணுவ தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

מערכת ״ברק״ בשימוש ראשון במערך ההגנה האווירית של חיל האוויר יירטה כלי טיס בלתי מאוייש

מוקדם יותר היום מערכת ״ברק״ של מערך ההגנה האווירית של חיל האוויר, יירטה כלי טיס בלתי מאוייש שחצה לשטח ישראל.

מערכת ״ברק״ פותחה בישראל על מנת להגן מפני איומים אוויריים.

חיל האוויר ימשיך לפעול… pic.twitter.com/9ZoBGXA0Hk


— צבא ההגנה לישראל (@idfonline) June 20, 2025

குறிப்பாக, இந்த பராக் அமைப்பு ட்ரோன் தாக்குதலை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, போர்க்கப்பலில் இருந்து வெளியிடப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சக்தி இந்த பராக் தடுப்பு அமைப்புக்கு உள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 21, 2025 8:45 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Barak System : ஈரானின் அதிநவீன ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் இஸ்ரேல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

Read More

Previous Post

IND vs ENG : 39 ஆண்டு ரிக்கார்டை முடிவுக்கு கொண்டுவந்த ராகுல் – ஜெய்ஸ்வால்.. ரசிகர்கள் பாராட்டு

Next Post

பினாங்கில் சட்டவிரோத சுற்றுலா நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கை | Makkal Osai

Next Post
பினாங்கில் சட்டவிரோத சுற்றுலா நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கை | Makkal Osai

பினாங்கில் சட்டவிரோத சுற்றுலா நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin