Last Updated:
டாக்காவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தாரிக் ரஹ்மானும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸூம் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, 300 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அடங்கிய கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், டாக்காவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தாரிக் ரஹ்மானும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸூம் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
தேர்தலில் வாக்களித்தப் பிறகு பேசிய பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான், “வாக்களிப்பு இப்போதுதான் தொடங்கியுள்ளது. முடிவு குறித்து இப்போதே கருத்து தெரிவிப்பது சரியல்ல. ஆனால், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மக்களின் தீர்ப்பில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.’ என்றார்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், “தயவுசெய்து அனைவரும் வாக்களியுங்கள். அது தொடர்ச்சியை உறுதி செய்யும்” என்று வாக்களித்த பிறகு அவர் கூறினார்.
Bangladesh Election 2026: விறுவிறுப்பாக நடைபெறும் வங்கதேச தேர்தல் வாக்குப்பதிவு… ரிசல்ட் எப்போது வெளியாகும்?


