• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ballon d’Or 2025 விருது: பரிந்துரை பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ இல்லை! | Ballon d’Or 2025 Award Messi Ronaldo not on nominees list

GenevaTimes by GenevaTimes
August 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
Ballon d’Or 2025 விருது: பரிந்துரை பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ இல்லை! | Ballon d’Or 2025 Award Messi Ronaldo not on nominees list
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாரிஸ்: நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதுக்கான 30 வீரர்கள் அடங்கிய பரிந்துரை தற்போது வெளியாகி உள்ளது. இதில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் ரொனால்டோ பெயர் இடம்பெறவில்லை.

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் Ballon d’Or விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் எப்போதும் போல அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

நடப்பு ஆண்டில் இந்த விருதுக்கான பட்டியலில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ பெயர் இடம்பெறவில்லை. இதில் இந்த விருதை அதிக முறை வென்ற வீரராக மெஸ்ஸி அறியப்படுகிறார். 8 முறை இந்த விருதை அவர் வென்றுள்ளார். அதேபோல அதிகபட்சமாக 18 முறை இந்த விருதுக்கான பரிந்துரையில் ரொனால்டோ இடம்பிடித்துள்ளார். அவர் 5 முறை இந்த விருதை வென்றுள்ளார்.

Ballon d’Or 2025 பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார், யார்? – பிரான்ஸின் டெம்பெல்லே, துவே, எம்பாப்பே, இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்கம், ஹாரி கேன், மொரோக்கோவின் ஹக்கிமி, போலந்தின் லெவான்டோவ்ஸ்கி, நார்வே நாட்டின் எர்லிங் ஹாலண்ட், அர்ஜெண்டினாவின் மார்ட்டினஸ், போர்ச்சுகலின் நுனோ மெண்டிஸ், ஜோவை நுவஸ், விதன்ஹா, பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர், ஸ்பெயினின் யமால், பேபியன் ருய்ஸ் மற்றும் எகிப்து நாட்டின் முகமது சாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளது. இவர்களின் கிளப் மற்றும் தேசிய செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த முறை இந்த பட்டியலில் பிஎஸ்ஜி கிளப் அணியை சேர்ந்த 9 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை அந்த அணி வென்றுள்ளது. அதேபோல ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் பிஎஸ்ஜி விளையாடி இருந்தது.



Read More

Previous Post

‘எம்ஜிஆருடன் இருந்தவர்களே உண்மையான கம்யூனிஸ்ட்’ மீண்டும் வேகம் காட்டிய எடப்பாடி பழனிசாமி!

Next Post

அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? | sectors in India affected by 50 percent tariff imposed by US explained

Next Post
அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? | sectors in India affected by 50 percent tariff imposed by US explained

அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? | sectors in India affected by 50 percent tariff imposed by US explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin