இந்திரா நகர் தொகுதியில் உள்ள திலாஸ்பேட்டையில், முதலமைச்சர் ரங்கசாமி, கோயிலில் தரிசனம் செய்து விட்டு, இருசக்கர வாகனத்தில் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நியூஸ் 18க்கு பேட்டியளித்த அவர், பீகார் முதலமைச்சரின் நிதிஷ்குமார் நிலைமை தனக்கு வராது என்றார். இதேபோல், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றினர்.


