[ad_1]
Last Updated:
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணியை இந்தியா 57 ரன்களில் ஆட்டமிழக்க செய்துள்ளது. இதையடுத்து 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்று வரும் ஏ பிரிவு போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியின் பேட்ஸ் மேன்களில் தொடக்க வீரர் அலிசான் ஷராபு 22 ரன்களும், கேப்டன் முகமது வசீம் 19 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
September 10, 2025 9:22 PM IST