Last Updated:
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மேட்சை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த மேட்ச்சில் டாஸ் வெற்றி பெற்றுள்ள வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்தியாவும் வங்கதேசமும் தனது முதல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மேட்சை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்.
இந்நிலையில், டாஸ் வெற்றி பெற்ற வங்கதேச அணி கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.
இந்தியா (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி
September 24, 2025 7:51 PM IST


