Last Updated:
நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை இன்று எதிர்கொண்டு விளையாடுகிறது.
டாஸின் போது வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐக்கிய அரபு அமீரக அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த 8 அணிகள் இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றன. 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் அணிகள் உள்ளன.
குரூப் சுற்று, அதனைத் தொடர்ந்து சூப்பர் ஃபோர், அடுத்ததாக ஃபைனல் என மூன்று கட்டங்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது.
நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இன்று 2 ஆவது போட்டியாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் களம் கண்டுள்ளன.
டாஸ் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன்(வ), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
September 10, 2025 7:43 PM IST


