Last Updated:
சிவம் துபே 2 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் வங்க தேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலையில் இந்த போட்டி இரு அணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் 4 ஆவது ஆட்டமாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் சுப்மன் கில் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ரன்கள் சேர்த்து அரைச்சதம் கடந்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் இன்றைக்கு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர். சிவம் துபே 2 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 5 ரன்களும், அக்சர் படேல் 10 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 168 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
September 24, 2025 9:52 PM IST


