Last Updated:
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று மேட்ச்சில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்கான் 58 ரன்களும், சைம் அயுப், முகமது நவாஸ் தலா 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிவம் துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் – அபிசேக் சர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 39 பந்துகளை எதிர்கொண்ட அபிசேக் சர்மா 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 7 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தபோது ரன் குவிப்பு வேகம் குறைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
September 22, 2025 12:16 AM IST


