Last Updated:
கேப்டன் சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா உள்ளிட்டோரும் இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வென்ற கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள், தங்கள் கையில் கோப்பை இருப்பது போன்று விளையாட்டாக எடிட் செய்து பகிர்ந்துள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள மோஷின் நக்வி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் என்பதால் அவரிடம் இருந்து கோப்பையை பெற இந்திய அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் உட்பட பல வீரர்கள் தங்கள் புகைப்படத்தை கோப்பை எமோஜியை வைத்து பகிர்ந்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்ட்யா தனது வழக்கமான போஸில் தனக்கு முன் கோப்பை எமோஜியை இணைத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கேப்டன் சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா உள்ளிட்டோரும் இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட புகைப்படத்தில் தேசிய கொடியின் எமோஜியை சேர்த்து அது தான் எங்களது கோப்பை என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி காபி கோப்பையை தனது பக்கத்தில் வைத்துக்கெண்டு புகைப்படம் பகிர்ந்துள்ளார். அதில் உலகம் ஒரு பக்கம், எனது இந்தியா மற்றொரு பக்கம் என அவர் பகிர்ந்துள்ளார்.
September 29, 2025 9:28 PM IST


