Last Updated:
இந்தியா, முதல் அணியாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இலங்கை அணி வெளியேறியுள்ளது.ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
நடப்பு ஆசியக் கோப்பைத் தொடரில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணியாகத் திகழும் இந்தியா சூப்பர் 4 சுற்றின் நேற்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.
துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது.வான வேடிக்கை நிகழ்த்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்து மிரட்டினார். ஷுப்மன் கில் 29 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 38 ரன்களும் சேர்த்து அணிக்கு உதவினர்.
பின்னர் விளையாடிய வங்கதேசம் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் ரன் சேர்க்கவும் திணறியது.
இதனால் 19.3 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆன அந்த அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 41 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வாகை சூடியது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
September 25, 2025 2:59 PM IST


