[ad_1]
Last Updated:
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்துவது தேசிய கண்ணியம் மற்றும் பொதுமக்களின் உணர்வுக்கு முரணானது என்று கூறப்பட்டிருந்தது
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 14ஆம் தேதி மோத உள்ளன. இதனைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கி
ரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணியான இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது. இந்நிலையில் வரும் 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் 4 சட்ட மாணவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
இதனை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் விஷ்ணு ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அந்த மனுவில், பயங்கரவாத தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆபத்தை ஏற்படுத்தியது.
September 11, 2025 3:46 PM IST