[ad_1]
Last Updated:
இதற்கு முன்பு, 2014-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக 90 பந்துகள் மீதமிருக்க வெற்றிபெற்ற இலங்கையின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. குல்தீப்பின் சிறப்பான பந்துவீச்சால் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 58 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, வெறும் 4.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை அள்ளிய குல்தீப் யாதவ், ஆட்டநாயகன் விருதை வென்றார். குல்தீப் யாதவ் 2.1 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், டி20 ஆசிய கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் (13 பந்துகளில்) 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை அவர் ஏற்படுத்தினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 93 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆசியாவில் உள்ள முழு உறுப்பினர் அணி ஒன்று அதிகபட்ச பந்துளை மீதம் வைத்து வெற்றிபெற்ற சாதனைப் பட்டியலிலும் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு, 2014-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக 90 பந்துகள் மீதமிருக்க வெற்றிபெற்ற இலங்கையின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
September 11, 2025 9:26 PM IST