பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பந்தர் கார்டன் அரசு பள்ளியில் வைக்கப்பட்டுள்ள, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் பேசிய மாயாவதி, “தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை பலப்படுத்தியவர் ஆம்ஸ்ட்ராங். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது மரணம் கட்சிப் பிரச்னை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்னை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்.

