பெங்களூரு : பி.எம்.டி.சி.,யில் காலியாக இருக்கும் 2,500 கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கர்நாடகா தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10ம் தேதி கடைசி நாள்.
பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோபாலிடன் போக்குவரத்து கழகம் சார்பில், பெங்களூரு நகருக்குள் தினமும் 6,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பி.எம்.டி.சி.,யில் காலியாக இருக்கும் 2,500 பணியிடங்களை, கர்நாடகா தேர்வு ஆணையம் நிரப்ப உள்ளது. இதற்கான தேர்வு அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10ம் தேதி ஆகும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
ஆண் தேர்வரின் உயரம் 160 சென்டி மீட்டராகவும், பெண் தேர்வர் உயரம் 150 சென்டி மீட்டராகவும் இருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொது பிரிவினர் 35 வயது; பட்டியல் ஜாதி, பழங்குடியினர் 40 வயது; முன்னாள் ராணுவத்தினர் 45 வயது உடையவராக இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் 750 ரூபாய். பட்டியல் ஜாதி, பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினருக்கு 500 ரூபாய். தேர்ந்து எடுக்கப்படுவர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி அளிக்கப்படும். அப்போது பயிற்சி படியாக மாதம் 9,100 ரூபாய் வழங்கப்படும். இந்த தேர்வுக்கு http://kea.kar.nic.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement