உலகிலேயே மிகவும் ஆடம்பரமாக மிகவும் அதிக பொருட்செலவில் முதன்முதலில் நடந்த திருமணம் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா ஆகியோருடையதுதான். அதன்பிறகு தற்போது முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் மிகவும் அதிக பொருட்செலவில் நடைபெற்றுள்ளது. பல நூறு மதிப்பிலான திருமணம் ஒரு பக்கம் என்றால், அனந்த் அம்பானி அணிந்திருந்த கடிகாரம் மறுபுறம் பேசு பொருளாகியுள்ளது. காரணம் அதன் விலை தான்.
ஆம், அனந்த் அம்பானி அணிந்திருந்த கடிகாரத்தின் விலையை நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஏனெனில், அதன் விலை ரூ.460 கோடி. கடிகாரத்தின் இவ்வளவு விலைக்கு காரணம், அதில் இடம்பெற்று இருக்கும் கிராஃப் டயமண்ட் தான். இந்த கடிகாரத்தில் கண்ணுக்குத் தெரியாத பிளாட்டின வளையலில், 110 காரட் அரிய வகை வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மஞ்சள் முதல் அடர் நீலம் வரையிலான வைரங்கள் உள்ளன. அத்துடன் மையப்பகுதியில் இருக்கும் டயலில் சிறிய இளஞ்சிவப்பு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய வைரக் கலவையிலான கடிகாரம், வெறும் நேரம் பார்ப்பதற்கு என்பதைத் தாண்டி, ஆடம்பரத்தின் ஓர் அடையாளம் என்று கருதப்படுகிறது. இத்தகைய ஆடம்பர கடிகாரத்தை உருவாக்கியவர் தென்னாப்பிரிக்க டயமண்ட் கார்ப்பரேஷனின் முன்னணி பங்குதாரராக இருக்கும் லாரன்ஸ் கிராஃப். இந்த கடிகாரத்தை கற்பனை செய்து, அதை உருவாக்குவதற்கு நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறியுள்ள இவர், அதன் நுணுக்கமான உற்பத்தி செயல்முறைகளுக்கு 30 பணியாளர்களும் உதவியதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
“எனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்” – அதிர்ச்சியை கிளப்பிய டெலிகிராம் நிறுவனர்!
லண்டனில் பிறந்த இவர், ஒரு நகைக் கடையில் பயிற்சியாளராகத் தொடங்கி, 24 வயதிற்குள் லண்டனில் இரண்டு நகைக் கடைகளைத் தொடங்கினார். அவரது வர்த்தகம் நாளுக்கு நாள் விரிவடைந்ததால், பிரிட்டனில் மிகப்பெரிய நகை உற்பத்தி நிறுவனமாக மாறியது. இன்று கிராஃப் டயமண்ட் லண்டன், ஹாங்காங், நியூயார்க், ஜெனிவா மற்றும் டோக்கியோ உள்பட உலகின் 40 இடங்களில் கட்டைகளை வைத்துள்ளது. ஆடம்பரமான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம்தான், இளவரசி டயானா, மேகன் மார்க்லே மற்றும் அனந்த் அம்பானி போன்ற பல பிரபலங்களுக்கு கடிகாரங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
