Last Updated:
விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக விமானம் சனிக்கிழமை காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. ஜோர்ஹாட் விமானப்படைத்தளத்தில் விமானம் தரையிறக்கப்பட்ட போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் தீப்பற்றிய நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் விமானம் வெடித்து சிதறியது.
The Indian Air Force deeply regrets the loss of five personnel in the An-32 accident at Jorhat, Assam.
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty.… pic.twitter.com/9SmOjtS5mU— Indian Air Force (@IAF_MCC) June 13, 2026
இதில், 5 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குறிப்பாக விமானப்படை அதிகாரிகள் பிரசாந்த் சிங், ஷூபம் குமார், ஜிதேந்திர ஷர்மா மற்றும் அக்னி வீரர்கள் கீமாராம் குமாவத் மற்றும் டேனிஷ் ஆலம் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். மேலும் படுகாயம் அடைந்த துணை விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.


