நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் பிரசாரத்தின் போது, “அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் , டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்குக்கு கேபினட் அமைச்சர் பதவியோ அல்லது வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவியோ வழங்கப்படும்” என அறிவித்தார்.
ட்ரம்ப் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், “நான் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்” என எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

