Last Updated:
Amazon Shopping Account | அமேசான் வழியாக கிரெடிட் கார்டு பயன்படுத்தி நீங்கள் பொருட்களை வாங்க விரும்புபவராக இருந்தால், உங்களுக்கான பதிவுதான் இது. கிரெடிட் கார்டு விவரங்களை உங்களது அமேசான் கணக்குடன் எவ்வாறு சேர்ப்பது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது மிகவும் சௌகரியமான ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும், சில சமயங்களில் நம்மிடம் பணமே இல்லையென்றாலும் கூட, கிரெடிட் கார்டை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதென்பது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.
கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் பொருட்களை வாங்கும்போது உங்களுக்கு பதிலாக உங்களுக்கு கிரெடிட் கார்டை வழங்கிய நிறுவனம் உங்கள் சார்பாக பணத்தை கட்டிவிடும். நீங்கள் பணத்தை செலுத்த வேண்டிய தேதி (Billing cycle) வரும்வரை, அதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் சரியான தேதிக்குள் நீங்கள் உங்களது பணத்தை கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்திற்கு செலுத்தினாலே போதுமானது.
ஈ-காமர்ஸ் பிளாட்பார்மில் கொடி கட்டி பறக்கும் அமேசான் வலைத்தளம் வாயிலாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். அமேசான் வழியாக கிரெடிட் கார்டு பயன்படுத்தி நீங்கள் பொருட்களை வாங்க விரும்புபவராக இருந்தால், உங்களுக்கான பதிவுதான் இது. கிரெடிட் கார்டு விவரங்களை உங்களது அமேசான் கணக்குடன் எவ்வாறு சேர்ப்பது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
அமேசானில் கிரெடிட் கார்டு விவரங்களை சேர்க்கும் வழிமுறை:
- அமேசான் வெப்சைட் அல்லது அமேசான் செயலியை உங்களது டிவைஸில் டவுன்லோட் செய்து, அமேசான் தளத்தை ஓபன் செய்து உங்களது லாகின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
- பிறகு ஸ்க்ரீனின் மேல் பக்கம் இடது புறம் உள்ள மெனு ஐகானை கிளிக் செய்து அதில் “Your Account” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- நீங்கள் அமேசான் வலைதளம் மூலமாக உங்களது கணக்கை லாகின் செய்திருந்தால், மேல் பக்கம் உள்ள மெனுவை கிளிக் செய்து அதில் “Account and Lists” என்பதை கிளிக் செய்து, அதில் “Your Account” என்பதை தேர்வு செய்யவும்.
- இப்போது உங்களது அமேசான் அக்கவுன்ட் செட்டிங்கிற்கு சென்று அதில் “Payment Options” அல்லது “Manage Payment Options” என்பதை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது “Add payment” என்பதை கிளிக் செய்து உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை வெளியீடு செய்யவும். இந்த ஆப்ஷனில் உங்களது கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு, வங்கிக் கணக்கு என பல்வேறு விதமான பண பரிவர்த்தனைகளையும் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.
- இப்போது உங்களது கிரெடிட் கார்டு பற்றிய முழு விவரங்களையும் உள்ளீடு செய்து, நீங்கள் உள்ளீடு செய்த விவரங்கள் அனைத்தும் சரியானதுதான் என்பதை உறுதி செய்தபின் “Add Your Card” என்பதை தேர்வு செய்யவும்.
- பாதுகாப்பு காரணங்களுக்காக உங்களது விவரங்களை வெரிஃபை செய்யுமாறு அமேசான் கேட்கலாம். அதற்காக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் அல்லது இமெயிலுக்கு அனுப்பப்படும் OTP-ஐ என்டர் செய்யவும். அவ்வளவு தான், உங்களது கிரெடிட் கார்டு அமேசான் கணக்குடன் இணைக்கப்பட்டுவிடும்.
கிரெடிட் கார்டை அமேசான் கணக்குடன் இணைக்கும்போது கவனிக்க வேண்டியவை:
உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை நீங்கள் அமேசான் தளத்துடன் இணைக்கும்போது உங்களது கிரெடிட் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் அமேசானுக்கு முழுமையாக அளிக்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்.
இதையும் படிக்க: Pension Plan | எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் Vs டாடா ஏஐஏ ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம்: முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்….!
மேலும், பொருட்களை வாங்கும்போது உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை தடுப்பதற்கு பப்ளிக் நெட்வொர்க்கை பயன்படுத்துவதை தவிர்க்கவும். முடிந்த அளவு நம்பகத்தன்மை உள்ள தனிப்பட்ட நெட்வொர்க்கின் மூலம் அமேசான் தளத்தை பயன்படுத்தலாம். உங்களது கிரெடிட் கார்டை நீங்கள் நீக்க விரும்பினால், அதற்கான ஆப்ஷனும் அமேசானில் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
February 25, 2025 2:18 PM IST
Amazon Shopping Account | அமேசான் ஷாப்பிங் அக்கவுன்ட்டில் உங்களது கிரெடிட் கார்டை சேர்ப்பது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க…


