Amazon பணிநீக்கம்.. ஓரே மாதத்தில் 2 முறை.. ஆடிப்போன டெக் ஊழியர்கள்..!
உலகின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் மீண்டும் மீண்டும் பணிநீக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக உள்ளது. இந்த மாத துவக்கத்தில் அமேசான் நிறுவனத்தின் ரீடைல் பிரிவில் சுமார் 1000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய நிலையில் இன்று 250 ஊழியர்களைத் தனது டிவைஸ் மற்றும் சர்வீஸ் பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளது.
உலகளவில் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு பணிகளை ஆட்டோமேட் செய்ய காரணத்தால் ஊழியர்கள் எண்ணிக்கை வேகமாகக் குறையத் துவங்கியது. இதன் எதிரொலியாக அமேசான் தொடர்ந்து சந்தையில் புது புது கருவிகளை அறிமுகம் செய்து வரும் வேளையிலும் பணிநீக்கத்தில் குறியாய் உள்ளது.

அமேசான் நிறுவனம் 2025ல் 14000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 16000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதன் பின்பு அடுத்தடுத்து பல முறை சிறு சிறு எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏஐ சேவையில் பெரியளவில் வர்த்தக சந்தையைப் பிடிக்கவும் கூகுள், மைக்ரோசாப்ட்-க்கு இணையாக வளர்ச்சி அடையவும் அமேசான் டேட்டா சென்டர், இன்பரா-வில் சுமார் 125 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளது.
ஏஐ பிரிவில் அதிகளவில் முதலீடு செய்யும் அனைத்து நிறுவனங்களும் பணிநீக்கத்தை ஒரு செலவின குறைப்பு கருவியாக பார்க்கிறது.
சமீபத்தில் அமேசான் நிறுவனம் கின்டில் ஈ-ரீடர் மற்றும் டேப்லெட் கம்பியூட்டர்களை அறிமுகம் செய்தது, புதன்கிழமை அலெக்ஸா உடன் இயங்கும் அலரம் கிளாக் மற்றும் போட்டோ பிரேம்-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆயினும் டிரைஸ் பிரிவில் இருந்தும், சர்வீஸ் பிரிவில் இருந்தும் தற்போது பணிநீக்கம் செய்துள்ளது அமேசான்.
இதுகுறித்து அமேசான் செய்தி தொடர்பாளர் பேசுகையில் நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்தக் குறைந்த எண்ணிக்கையிலான பணிநீக்கத்தைச் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
இத்தகைய பணிநீக்கம் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் செயல்திறன் அதிகரிக்கும், நிறுவனத்தின் இலக்குகளை வேகமாக எட்டுவதற்கான சூழ்நிலை உருவாகும் என தெரிவித்தார்.
இந்த பணிநீக்கம் குறித்து ஊழியர்களுக்கு விடியற் காலையில் ஈமெயில் வாயிலாகவும், டெக்ஸ்ட் மெசேஜ் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நேரத்தின் படி இன்று மாலை வர்த்தக நேரம் முடிந்த பின்பு தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.
