கடந்த ஜூன் 25-ஆம் தேதி மாலையில், தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி கட்டடத்தின் தரைத்தளத்தில் மாணவா் சங்க அலுவலகம் அருகே உள்ள பாதுகாவலரின் அறையில் சம்பவம் நடந்துள்ளது. கல்விப் படிவம் நிரப்ப வேண்டுமெனக் கூறி யாரோ சிலரால் வரவழைக்கப்பட்ட மாணவி, பின்னா், அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அங்கு முன்னாள் சட்ட மாணவா் மற்றும் 2 மூத்த மாணவா்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். இரவு 10 மணிவரை மாணவியைத் துன்புறுத்தியுள்ளனா். அதன் பிறகு, கடுமையான காயங்களுடன் அங்கிருந்து மாணவி விடுவிக்கப்பட்டுள்ளாா்.
சம்பந்தப்பட்ட மாணவியை திருமணம் செய்ய முன்னாள் மாணவா் விருப்பம் தெரிவித்தாகவும், மாணவி மறுத்துவிட்டதால், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கைதான மூவரையும் 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.