• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Akshaya Tritiya: அக்ஷசய திருதியைக்கு தங்கம் வாங்கலாம்னு ஐடியா பண்ணிருக்கீங்களா..? இந்த விஷயம் மட்டும் தெரியலனா ஏமாந்து போயிடுவீங்க!

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Akshaya Tritiya: அக்ஷசய திருதியைக்கு தங்கம் வாங்கலாம்னு ஐடியா பண்ணிருக்கீங்களா..? இந்த விஷயம் மட்டும் தெரியலனா ஏமாந்து போயிடுவீங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அப்படி பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்களில், இந்நாளில் தங்கம் வாங்குவதால் செல்வ வளம், பாதுகாப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் அக்ஷய திருதியை அன்று நகை வாங்குவதற்காக நகை கடைக்கு செல்வதற்கு முன்பு தங்கத்தின் விலையை சரி பார்ப்பதோடு இன்னும் ஒரு சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியான சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்க நகை என்பது ஒரு முழுமையான முதலீடு கிடையாது: 

நகைக் கடைக்கு சென்று நீங்கள் தங்க நகை வாங்கும் பொழுது அதில் செய்கூலி, சேதாரம், வரி என்று கூடுதல் செலவுகள் உங்கள் தலையில் விடியும். எனவே உங்களுடைய இலக்கு சுத்தமான முதலீடு என்றால் தங்க நாணயங்கள், ETFகள் அல்லது தங்க பத்திரங்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

தங்கத்தை விட அதிக விலை கொண்ட தங்க நகைகள்: 

ஒரு கிராம் தங்கத்தின் விலை என்பது உங்களுடைய செலவில் ஒரு பகுதி மட்டுமே. இதில் செய்கூலி, GST (3%) மற்றும் ஹால்மார்க்கிங் கட்டணங்கள் போன்றவை இறுதி பில்லில் சேர்க்கப்படும். இதனால் தங்க நகை என்பது அடிப்படை தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்கிறது.

Google விலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: 

நீங்கள் செய்தி அறிக்கைகள் அல்லது Google போன்ற சர்ச் எஞ்சின்களில் பார்க்கும் தங்கத்தின் விலைகள் தோராயமானதாக தான் இருக்கும். உண்மையான தங்கத்தின் விலை அதைவிட சற்று அதிகமாகவோ அல்லது நகரத்தை பொறுத்து மற்றும் நகைக்கடையை பொறுத்து மாறுபடலாம். எனவே உள்ளூரில் நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள தங்கத்தின் விலையை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

முடிவு எடுப்பதற்கு முன்பு ஒப்பிட்டு பார்க்கவும்: 

செய்கூலி, சேதாரம், ஆஃபர் மற்றும் ரீசேல் பாலிசிகள் போன்றவை நகைக்கடைக்கு நகைக்கடை மாறுபடும். எனவே பல்வேறு நகை கடைக்கு சென்று விலைகளை ஒப்பிட்டு பார்த்து, உங்களுடைய பணத்திற்கான சிறந்த மதிப்பை பெறுவதை உறுதிப்படுத்துங்கள்.

கேரட்டுகள் பற்றி தெரிந்து கொள்வது:

தங்க நகை என்பது வழக்கமாக 22K, 18K அல்லது 14K தங்கத்தில் கூட செய்யப்படுகிறது. 24K தங்கம் என்பது பொதுவாக தங்க நகைகளுக்கு பயன்படுத்தப்படுவது கிடையாது. குறைவான கேரட் தங்க நகையில் குறைவான தங்கம் இருக்கும். எனவே தங்கத்தின் தூய்மை மற்றும் விலை மீது அதன் தாக்கம் போன்றவற்றை புரிந்து கொள்வது அவசியம்.

BIS ஹால்மார்க்: 

BIS (பியூரியா ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) ஹால்மார்க் என்பது தங்கத்தின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. எனவே நீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் ஸ்டாம்ப் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

மறைமுகமாக வசூலிக்கப்படும் செய்கூலி:

செய்கூலி என்பது 5% முதல் 10% வரை இருக்கலாம். நீங்கள் நுணுக்கமான டிசைன்களை வாங்கும் பொழுது செய்கூலி அதிகமாக இருக்கும். எனவே எப்பொழுதும் தங்கத்தின் விலையில் இருந்து செய்கூலியை தனித்து காட்டும் விவரமான ரசீதை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

ஆஃபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்: 

அக்ஷய திருதியையின் போது வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பெரும்பாலும் செய்கூலிக்கே வழங்கப்படும். ஆனால் தங்கத்தின் விலைக்கு பெரும்பாலும் வழங்கப்படாது. எனவே தங்கம் வாங்குவதற்கு முன்பு விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படித்து, எக்ஸ்சேஞ்ச் பாலிசி குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய தங்க நகை நாளைய பேக்கப் ஆக இருக்கலாம்: 

ஒருவேளை நீங்கள் தங்க நகையை பிற்காலத்தில் விற்பதற்கு முடிவு செய்தால் குறைவான கேரட் கொண்ட தங்க நகைகள் மற்றும் அதிக செய்கூலி போன்றவை உங்களுடைய மறு விற்பனை மதிப்பை குறைக்க கூடும். எனவே வாங்கும்போதே ரீசேல் மற்றும் பைபேக் விதிகள் குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளவும்.

தங்க நகை என்பது உணர்வுபூர்வமான மற்றும் பாரம்பரியமான மதிப்பை கொண்டிருந்தாலும், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தரமான ஒரு பொருளை வாங்குவது அவசியம். எனவே கேள்விகளை கேளுங்கள், தங்கம் தூய்மையானதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள், விலைகளைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள், புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்யுங்கள்.

First Published :

April 29, 2025 4:19 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

அக்ஷசய திருதியைக்கு தங்கம் வாங்கலாம்னு ஐடியா பண்ணிருக்கீங்களா..? இந்த விஷயம் மட்டும் தெரியலனா ஏமாந்து போயிடுவீங்க!

Read More

Previous Post

ஐபிஎல் 2025: இளம் திறமைகளை உருவாக்கும் சிறந்த பள்ளியாக ஐபிஎல் உள்ளது.. ஜோஸ் பட்லர்

Next Post

“இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் | Pakistan Defence Minister says ‘military incursion’ by India is imminent

Next Post
“இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் | Pakistan Defence Minister says ‘military incursion’ by India is imminent

“இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்” - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் | Pakistan Defence Minister says ‘military incursion’ by India is imminent

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin