Last Updated:
Ajit Pawar | மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மராட்டிய மாநிலம் பரமாதியில் தரையிறங்கிய போது அஜித் பவாரின் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த கோர விபத்தில் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட அஜித் பவார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானத்தில் உடன் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


