• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

AirAsiaவுக்கு  உலக சாதனை விருது! டான்ஸ்ரீ டோனியின் கடுமையான  உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in மலேசியா
Reading Time: 8 mins read
0
AirAsiaவுக்கு  உலக சாதனை விருது! டான்ஸ்ரீ டோனியின் கடுமையான  உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


(Mourhrna Reddy @ London) 

மலேசியாவின் மிகச் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமாகப் புகழ்பெற்ற AirAsiaவுக்கு  லண்டனில் நடைபெறும் Skytrax World Airline Awards 2024 விருதளிப்பு நிகழ்ச்சியில்  15ஆவது தடவையாக  வரலாற்றுப்பூர்வ சாதனை விருது  வழங்கப்பட்டது.

இந்த உலகளாவிய சாதனைக்கு AirAsiaவின் நிறுவனரும் Capital A  தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ  டோனி பெர்னாண்டஸின் வியூகங்களும் ஆக்கப்பூர்வத் திட்டங்களும்  அடிப்படைக் காரணிகளாகத் திகழ்கின்றன.

மிகவும் நலிந்து நொடித்துப் போயிருந்த இந்த நிறுவனத்தை 2001ஆம் ஆண்டில்  டோனியும் கமாருடின் மெரானுனும் கொள்முதல் செய்து 2 விமானங்களுடன் சேவையில் ஈடுபட்டனர்.  200 பணியாளர்களுடன் சேவையைத் தொடங்கிய AirAsiaஆசியாவின் 4ஆவது மிகப் பெரிய நிறுவனமாக விளங்கியது.

தற்போது Malaysia, Thailand, Indonesia, the Philippines, Cambodia  மேலும் சில நாடுகளில் அலுவலகங்களை அமைத்து  21 ஆயிரம் பணியாளர்களுடன் 200 விமானங்களை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

சாமானியனும் விமானத்தில் பயணிக்கலாம் என்ற ஓர் உயரிய, உன்னத நோக்கத்துடன் ஏர்ஆசியாவைத் தொடங்கி இன்று விமானச் சேவைத் துறையில்  வரலாற்றுத் தடங்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார் டான்ஸ்ரீ டோனி.

AirAsia குழுமம் அதன் 5ஆவது விமான நிறுவனமாக ஏர்ஆசியா கம்போடியாவை தோற்றுவித்து  சேவையில் ஈடுபட்டிருப்பது அதன் வளர்ச்சிக்கான  மிகப் பெரிய சான்றாக உள்ளது.

இதுபோன்ற தொடர் சாதனைகளை மற்ற எந்தவொரு விமான நிறுவனமும் படைத்ததில்லை. நலிந்து தடம் தெரியாமல் போகவிருந்த ஒரு விமான நிறுவனத்தை வாங்கி இன்று அடுக்கடுக்கான சாதனை விருதுகளைப் பெறுவதற்கு  டான்ஸ்ரீ டோனி அடித்தளமிட்டிருக்கிறார்.

அனைவரும் விமானத்தில் பறக்கலாம் என்ற கனவை நனவாக்கியவர் அவர். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 80 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது.  பல சவால்களைக் கடந்து இன்று வெற்றிப் பாதையில்  ஏர் ஆசியா பயணித்துக் கொண்டிருக்கிறது. 

AirAsia வின்  வளர்ச்சி என்பது கனவிலும்  நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இந்தப் பெருமைக்கெல்லாம்  அடிப்படை கரணியாகத்  திகழ்பவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்.

Covered By, London: Mourhrna Reddy, Communication Director, Makkal Osai Leading Tamil Daily



Read More

Previous Post

India vs Australia: சதுராட்டம் ஆடிய ரோஹித்.. ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரவெற்றி!-indian team is great after beating australia by 24 runs in t20 mens world cup

Next Post

இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன் – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

Next Post
இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன் – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன் - Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin