• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

AI மனித குலத்தை அழிக்கும்: AI உருவாக்கியவர்களே இப்படி சொல்லிட்டாங்களே..!! | Anthropic IPO Filing Warns: Advanced AI Could Pose “Catastrophic or Existential Risks to Humanity”

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
AI மனித குலத்தை அழிக்கும்: AI உருவாக்கியவர்களே இப்படி சொல்லிட்டாங்களே..!! | Anthropic IPO Filing Warns: Advanced AI Could Pose “Catastrophic or Existential Risks to Humanity”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


AI மனித குலத்தை அழிக்கும்: AI உருவாக்கியவர்களே இப்படி சொல்லிட்டாங்களே..!!

ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பது தான் உலகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ள அச்சம். இந்நிலையில் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) தனது ஐபிஓ வெளியீட்டுக்காக தயார்படுத்தி வரும் ஆவணங்களில், எதிர்கால அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் மனிதகுலத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து மிக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

ஏஐ சார்ந்த ஆய்வுகளும் ஏஐ பயன்பாடும் வேகமாக வளர்ந்து வரும் வேளையில், முன்னணி ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் விரைவில் ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இதற்காக இந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் முதலீட்டாளர்களுக்கு திடுக்கிடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதிர்கால அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மனிதகுலத்திற்கே பேரழிவை தரக்கூடிய அல்லது முற்றிலுமான அழிவை உருவாக்கக்கூடிய ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

AI மனித குலத்தை அழிக்கும்: AI உருவாக்கியவர்களே இப்படி சொல்லிட்டாங்களே..!!

ஏஐ தொழில்நுட்பத்தால் என்னென்ன ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த நிறுவனம் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.

1. Self-preserving behaviours – ஏஐ தனது சொந்த நலனுக்காக செயல்பட தொடங்கும். அதாவது தன்னுடைய நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும்.

2. Resisting Shutdown – மனிதர்கள் ஏஐ அமைப்புகளை நிறுத்தவோ அல்லது அணைக்கவோ முயன்றால், அதை எதிர்ப்பது.

3. Conceal or manipulate information: உண்மைகளை திரிப்பது அல்லது தங்களுக்கு சாதகமாக தகவல்களை மாற்றுவது.

4. Behaviour resembling blackmail: மனிதர்களை மிரட்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

5. Unexpected capabilities: எதிர்பாராத புதிய திறன்களை வெளிப்படுத்துவது.

பொதுவாக நிறுவனங்கள் பங்கு சந்தையில் நுழையும் போது தாங்கள் விற்கும் பொருட்களால் ஏற்படும் சாதாரண வணிக ஆபத்துகளை பற்றி மட்டுமே குறிப்பிடுவது வழக்கம். ஆனால், தாங்கள் உருவாக்கும் தொழில்நுட்பமே மனிதகுலத்தின் அழிவுக்கே வழிவகுக்கலாம் என வெளிப்படையாக ஆந்த்ரோபிக் கூறியுள்ளது. மொத்த 261 பக்கமுள்ள இந்த ஆவணத்தில் 80 பக்கங்கள் ஏஐ மூலம் ஏற்பட இருக்கும் ஆபத்துகளை மட்டுமே விளக்கியுள்ளது.

தொழிற்புரட்சிக்கு நிகரான மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலை ஏஐ கொண்டிருந்தாலும், அதனை முறையாக கையாள தவறினால் அது மாற்ற முடியாத தீங்கினை விளைவிக்கும் என எச்சரித்துள்ளது. ஏஐ அமைப்புகள் சோதனையின் போது தங்களுக்குள் இருக்கும் சில திறன்களை மறைத்து கொள்ளும் என்றும் அவை எங்கேனும் வெளிப்படும் போதும் தான் அதனை உருவாக்கியவர்களுக்கே தெரிய வரும் என்ற அளவுக்கு வளர்ந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது ஐபிஓ ஆவணத்தில் ஏஐ பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக கூறினாலும், பாதுகாப்புக்காக செய்யப்படும் முதலீடுகளுக்கு தகுந்த பலன் கிடைக்குமா என்பது தெளிவாக இல்லை என்றும், அதேசமயம் சந்தையில் போட்டியிடுவதற்காக தொடர்ச்சியாக புதிய ஏஐ மாடல்களை வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னதாக, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடேய் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதையும், மனிதர்களால் அதை கட்டுப்படுத்தும் திறனை தாண்டி அது வேகமாக முன்னேறி வருவதையும் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். மனிதர்களின் புரிதலைவிட ஏஐ வேகமாக வளர்ந்தால் என்னவாகும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் இவான் ஹூபிங்கர் அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஏஐ மனிதர்களை கொல்லக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதத்திற்கும் அதிகம் இருப்பதாக கணித்துள்ளார். இதே போன்ற கவலையை அவரது முன்னாள் சக ஊழியரான ஜேக்கப் காக்சனும் வெளிப்படுத்தியிருந்தார்.ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ போன்ற முன்னணி நிறுவனங்களின் ஏஐ மாடல்கள் பாதுகாப்பு விதிகளையும் மீறி சோதனை முறை அமைப்புகள் கடந்து அரசு இணையதளங்களையே ஹேக் செய்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.

Share This Article

English summary

Anthropic IPO Filing Warns: Advanced AI Could Pose “Catastrophic or Existential Risks to Humanity”

AI அமைப்புகளால் மனிதர்களுக்கு என்னென்ன ஆபத்து? உண்மையை போட்டுடைத்த Anthropic..!! / Ahead of its planned IPO, AI leader Anthropic has filed an extraordinary warning with investors: future advanced AI systems could cause “catastrophic or existential risks to humanity.” The 261‑page prospectus devotes about 80 pages to AI dangers.

Story first published: Tuesday, September 29, 2026, 8:18 [IST]

Other articles published on Sep 29, 2026

Read More

Previous Post

ஆசிய போட்டி.. பதக்கங்களை அள்ளிய தமிழக வீரர்கள்.. உதயநிதியின் திட்டங்கள் கைகொடுத்தது எப்படி? | Asian Games 2026: How Former Sports Minister Udhayanidhi Stalin’s Grassroots Push Paid Off

Next Post

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு – Sri Lanka Tamil News

Next Post
ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு – Sri Lanka Tamil News

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin