• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

AI டேட்டா மையம் முதல் உணவு பூங்கா வரை.. அசாமிற்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முகேஷ் அம்பானி

GenevaTimes by GenevaTimes
February 25, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
AI டேட்டா மையம் முதல் உணவு பூங்கா வரை.. அசாமிற்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முகேஷ் அம்பானி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அசாமில் நடைபெறும் அட்வான்டேஜ் அசாம் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு முகேஷ் அம்பானி பேசியதாவது-

பிரதமர் மோடிதான் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் வளர்ச்சி வரைபடத்தில் ஒருங்கிணைத்தார். இந்தியப் பிரதமராக மோடி 70க்கும் மேற்பட்ட முறை அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளார்.

மோடி அசாமுக்கு “கிழக்கே செயல்படு, வேகமாக செயல்படு, முதலில் செயல்படு” என்ற குறிக்கோளை வழங்கினார். இதன் விளைவாக, கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா தற்போது அசாமை வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்கான புதிய இடமாகக் காண்கின்றன.

பிரதமர் மோடி, அசாமினை தகவல் தொடர்பு புரட்சி, டிஜிட்டல் புரட்சி மற்றும் வளர்ச்சியுடன் மட்டுமல்லாமல், முழு இந்தியாவுடனும் உணர்வுபூர்வமாக இணைத்துள்ளார்.  பிரதமர் மோடியின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் முக்கிய உந்து சக்தியாகும். ஒரு காலத்தில் அசாம் தேயிலைத் தொழிலின் சொர்க்கமாக அறியப்பட்டது. ஆனால் வரும் நாட்களில், அசாம் தொழில்நுட்ப சொர்க்கமாக அறியப்படும். என்று பேசினார்.

Also Read: Gold Rate 25th Feb: வரலாற்றில் புதிய உச்சம்..! தொடர் உயர்வில் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து பேசிய அவர் அசாம் மாநிலத்திற்கு 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு-

முதன்மை அறிவிப்பு

அஸ்ஸாமை ‘தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தயார்’ மாநிலமாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஜியோ நெட்வொர்க் ஏற்கனவே அசாமினை ‘2G இலவச மற்றும் 5G மாநிலமாக’ மாற்றியுள்ளது. AI இன் மேம்பாட்டிற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அசாமில் ஒரு AI டேட்டா தரவு மையத்தை அமைக்கும். இது மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் AI தொழில்நுட்பத்துடன் பணியாற்ற உதவும். இளைஞர்கள் AI உதவியுடன் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ளுதல் மற்றும் வீட்டிலிருந்து நூல் வசதிகளை அணுக முடியும்.

2-ஆவது முன்னுரிமை

அஸ்ஸாமை தேயிலை மற்றும் பசுமை எரிசக்தி மற்றும் அணுசக்தி மையமாக மேம்படுத்துவதாகும். ரிலையன்ஸ் நிறுவனம் அசாமில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு மற்றும் CPG ஆலைகளை அமைக்கும். இந்த ஆலை ஆண்டுதோறும் 800,000 டன் பசுமை உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்யும். இது ஒவ்வொரு நாளும் 200,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பசுமை ஆற்றலில் இயங்க உதவும்.

3- ஆவது அறிவிப்பு

அசாமை உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் முக்கிய சப்ளையராக மாற்றுவதாகும். இதன் மூலம் அசாம் உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையிலும் வர்த்தகம் செய்ய முடியும். அசாமில் ஒரு மெகா உணவு பூங்கா அமைக்கும் திட்டத்தையும் முகேஷ் அம்பானி அறிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஏற்கனவே அசாமில் காம்பா கோலா மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

4-ஆவது முன்னுரிமை

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அசாமில் உள்ள ரிலையன்ஸ் சில்லறை விற்பனைக் கடைகளின் எண்ணிக்கையை 400 லிருந்து 800 ஆக உயர்த்துவதாகும்.

5- ஆவது திட்டம்

அசாமில் உயர்நிலை ஹோட்டல் பிரிவில் ஏழு நட்சத்திர ஓபராய் ஹோட்டலைக் கட்டுவதாகும். இந்த அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

இந்த முழு முதலீட்டுத் திட்டத்தின் மூலம் அசாமில் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, ரிலையன்ஸ் அறக்கட்டளை அசாமின் மூங்கில் தொழில் மற்றும் அசாமில் உள்ள உலகப் புகழ்பெற்ற சணல் தொழிலான ஷுவால்குச்சியை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் மேம்படுத்த பாடுபடும். அசாம் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த உற்சாகமான முயற்சிக்காக முகேஷ் அம்பானி முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவைப் பாராட்டினார்.

ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அசாமில் ரூ.12,000 கோடி முதலீடு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50,000 கோடி முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

First Published :

February 25, 2025 1:09 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

AI டேட்டா மையம் முதல் உணவு பூங்கா வரை.. அசாமிற்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முகேஷ் அம்பானி

Read More

Previous Post

முகமது ஷமி, ரோகித் சர்மாவுக்கு காயம்..? – ஷ்ரேயஸ் ஐயர் கொடுத்த முக்கிய அப்டேட்

Next Post

Tembakan KLIA – Hafizul dipenjara 14 tahun 6 bulan, 6 sebatan | Makkal Osai

Next Post
Tembakan KLIA – Hafizul dipenjara 14 tahun 6 bulan, 6 sebatan | Makkal Osai

Tembakan KLIA - Hafizul dipenjara 14 tahun 6 bulan, 6 sebatan | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin