Last Updated:
தனிப்பட்ட முறையிலான இரவு விருந்தில் டிரம்பும், ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடேவும் இன்று சந்தித்து பேசவுள்ளனர். இதை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
ஏஐ வளர்ச்சி குறித்த அச்சங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடே இன்று சந்தித்து பேசவுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி, மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக மாறலாம் என அத்துறையின் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த கருத்தை வழிமொழிந்த ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடே, “ஏஐ வளர்ச்சியை மட்டுப்படுத்துவது அவசியம்” எனக் கூறியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த டிரம்ப், ஏஐ போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக டாரியோ அமோடே எழுதிய கட்டுரையில் அவர், “நாளுக்கு நாள் அசுரவேகத்தில் வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும் அதிவேகமாக வளரும் ஏஐ-ன் திறன்களுக்கு ஏற்ப பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும், இணையத்தையே தன் கட்டுக்குள் கொண்டுவரும் ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி தீங்கிழைக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்தச் சூழலில், தனிப்பட்ட முறையிலான இரவு விருந்தில் டிரம்பும், ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடேவும் இன்று சந்தித்து பேசவுள்ளனர். இதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். ஏஐ உச்சி மாநாட்டு தொடர்பாக, முன்னணி ஏஐ நிறுவனங்களின் சிஇஓ-க்களை வெள்ளை மாளிகையில் டிரம்ப் நாளை சந்திக்கிறார். முன்னதாக டாரியோ அமோடே உடனான சந்திப்பு கவனம் ஈர்த்துள்ளது.


