Last Updated:
வங்கதேசத்தில் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்தப் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இறுதியில், அந்நாட்டு உச்சநீதிமன்றம், அமைச்சர்களின் இல்லங்கள் சூறையாடப்பட்டன.
மேலும், அமைச்சர்கள் சிலரை இளைஞர்கள் விரட்டி விரட்டி தாக்கினர். நிலைமை படுமோசமானதைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதனையடுத்து, அந்நாட்டு ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்தது.
ராணுவத்தின் கையில் அதிகாரம் வந்தபிறகு வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போராட்டம் முடிவுக்கு வந்தது. பிறகு வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து, நாட்டில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்; அதற்கு முன்னதாக சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக வங்கதேசத்தில் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேர்தல் பரப்புரை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வங்கதேச தேர்தல் ஆணையத்தின் முன்னாள் கூடுதல் செயலாளரான ஜெஸ்மின் துலி, இந்தத் தேர்தலில் ஏஐ மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரப்பப்படுவது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால் எந்த வேட்பாளர்களை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு வாக்காளர்கள் ஆளாகி வருகின்றனர்.
AI உருவாக்கிய போலி தகவல்களால் திணறும் வங்கதேச தேர்தல் களம்! குழப்பத்தில் வாக்காளர்கள்..


