ஜெனிபர் ஆலன் என்ற 36 வயதான ரியால்டர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர் நீண்ட காலமாகவே தன்னுடைய பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தனக்கு பிரச்சனை இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
“என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை என்பதால் கிடையாது. சிறுவயதிலிருந்தே எனக்கு பொருளாதாரக் கல்வி கற்பிக்கப்படாததே இதற்கு காரணம். பட்ஜெட் அமைப்பதை நான் தவிர்த்தேன், எவ்வளவுதான் கடுமையாக வேலை செய்தாலும் என்னால் பிரச்சனையை மட்டுமே சம்பாதிக்க முடிந்தது”, என்று அவர் கூறினார்.
தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானதாக அவர் கூறுகிறார்.
“நான் மனரீதியாக உடைந்து போனேன். என்னுடைய செலவுகளை சமாளிப்பதற்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த ஆரம்பித்தேன். நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழவில்லை. உயிர் வாழ்வதற்கு தேவையான செலவுகளை மட்டுமே செய்து கொண்டிருந்தோம். ஆனால் என்னுடைய கடன் மேலும் மேலும் அதிகரித்தது”, என்று ஆலன் கூறினார்.
இறுதியாக தன்னுடைய இந்த பிரச்சினையை சமாளிப்பதற்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியை நாடினால் என்ன என்று ஆலன் சிந்தித்து இருக்கிறார். 30 நாள் ஆன்லைன் சேலஞ்ச் மூலமாக ChatGPT உதவியுடன் தன்னுடைய கடனை செலுத்துவதற்கு அவர் முடிவு செய்தார்.
பணத்தை சேமிக்க அல்லது சம்பாதிக்க AI ஆலனிடம் தினம் ஒரு டாஸ்கை பரிந்துரை செய்யும். அப்படி வங்கி கணக்குகள் மற்றும் ஃபைனான்ஸ் அப்ளிகேஷன்களை தேடும் ஒரு டாஸ்க் மூலமாக ஆலன் $10,000 கண்டுபிடித்து இருக்கிறார். இது தோராயமாக 8.5 லட்சம் ரூபாய். அவருடைய 30 நாள் சவாலை முடிக்கும் போது ஆலன் கிட்டத்தட்ட $12,078.93 (தோராயமாக 10.3 லட்சம் ரூபாய்) கடனை செலுத்தி விட்டார். இதன் மூலமாக ஆலன் தன்னுடைய பாதி அளவு கடனை சமாளித்து விட்டார்.
ஆலன் தற்போது அடுத்த சவாலை தீர்ப்பதற்கு திட்டமிட்டு வருகிறார். மீதம் இருக்கக் கூடிய தொகையை அடுத்த 30 நாட்களில் செலுத்த வேண்டும் என்ற பிராம்ட் கொடுப்பதன் மூலமாக இந்த சவாலை ஆரம்பிக்க இருப்பதாக ஆலன் தெரிவித்து இருக்கிறார்.
“இது ஒரு பெரிய பொருளாதார ஹாக் கிடையாது”, என்று ஆலன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
“ஒவ்வொரு நாளையும் சமாளிப்பதற்கான ஒரு செயல்பாடு இது- அதனை படிப்படியாக கண்காணித்து, அதைப் பற்றி பேசி சமாளித்தல். என்னுடைய கடனைப் பார்த்து இனியும் நான் பயப்பட போவதில்லை”, என்று ஆலன் கூறியுள்ளார்.
“என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக நான் அவமானமாக உணரவில்லை. அதிகாரம் பெற்றதாகவும், ஏதோ ஒரு விஷயத்தை சாதித்ததாகவும் உணர்கிறேன்.” என்று ஆலன் கூறினார். கடனால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபருக்கு ஆலன் கூறுவது, “நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் அல்லது ‘இதனை ஆரம்பிக்க இந்த புத்திசாலித்தனம் போதும்’ என்ற மனப்பான்மை வரும் வரை காத்திருக்க வேண்டாம். அனைத்து பதில்களும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இது நடக்கவில்லையே என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்தினாலே போதுமானது”, என்று ஆலன் கூறியுள்ளார்.
July 04, 2025 8:56 AM IST